சொல் பொருள்
1. (வி.எ) பணிந்து, தாழ்ந்து
2. (பெ) 1. பணிதல்
2. பணிமொழி, கீழ்ப்படிதலுள்ள பேச்சு
சொல் பொருள் விளக்கம்
(வி.எ) பணிந்து, தாழ்ந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
obeying, being submissive
bowing, paying obeisance
submissive talk
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் ஒளியர் பணிபு ஒடுங்க – பட் 274 பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து (தம்)வீரம் குறைய, பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே – பதி 63/1 பார்ப்பனரைத் தவிர பிறரைப் பணிதலை அறியாய்; பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் நனி உருவத்து – பரி 6/63 “பணிமொழியொடு குறுகிநிற்கும் பண்பாளனே! முன்பு நீ கொண்டுவந்ததெல்லாம் சிறந்த உருவத்தைக் கொண்டிருந்தது,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்