சொல் பொருள்
(பெ) 1. பொருள், சரக்கு, 2. நறுமணப்பொருள்
சொல் பொருள் விளக்கம்
1. பொருள், சரக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
substance, article, provision, fragrant substances
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் மலிந்த விழு பண்டம் நாடு ஆர நன்கு இழிதரும் ஆடு இயல் பெரு நாவாய் – மது 81-83 பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை நாட்டிலுள்ளோர் நுகரும்படி நன்றாக இறக்குதலைச் செய்யும் அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் பகாஅர் பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் – அகம் 181/22,23 விற்பாரது நறுமணப்பொருள்கள் மணக்கின்ற வண்டுகள் மொய்க்கும் ஐம்பகுதியாய கூந்தலினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்