சொல் பொருள்
பண்டாரம் – துறவியரும் துறவிக் கோலத்தாரும்.
பரதேசி – இரந்துண்டு வாழ்பவர்.
சொல் பொருள் விளக்கம்
பண்டாரம் பரதேசிக்கு உணவிடுவது அறம் என்பது நெடுநாள் வழக்கம். பண்டாரம் என்பவர் துறவுத் தோற்றத்தாராம். பரதேசி என்பது அயல்நாட்டார் என்னும் பொருளது. அயல்நாட்டு இரவலர் பெயர் பரதேசியாக இருந்து பின்னை இந்நாட்டு இரவலர் பெயராக வழங்குகின்றதாம். பரதேசி வாழ்வு நாட்டுக்குத் தீராப்பழியாகவும் கேடாகவும் உருவாகி வருகின்றமை கண்கூடு. பரதேசம் என்பது கடல்கடந்த நாடன்று; ஐம்பத்தாறு தேசங்கள் என்று எண்ணிய காலம் உண்டே! அதைக்கருதுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்