சொல் பொருள்
தலையின் உச்சி பள்ளம்.
பதப்பு என்பது குளிர்ச்சி என்னும் பொருளதாம்
சொல் பொருள் விளக்கம்
தலையின் உச்சியில் ஒவ்வொருவர்க்கும் ஒரு பள்ளம் உண்டு. குழந்தை நிலையில் அப்பள்ளம் நன்றாகப் புலப்படும். அதனைப் பதப்பு என்பது விருதுநகர் வட்டார வழக்கு. அப் பள்ளத்தில் கை வைத்தால் நாடி துடிப்பதை நன்றாக அறியலாம். பதைப்பு > பதப்பு; நாடித்துடிப்பு. மற்றொன்று: அவ்விடம் வெப்பம் மிகாமல் இருக்கக் குழந்தைப் பருவத்தில் விளக்கெண்ணெய் தேய்த்தல் வழக்கம். பதப்பு என்பது குளிர்ச்சி என்னும் பொருளதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்