Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கற்குவியல், 2. இலைக்குவியல், 3. திட்டு, மேடு

சொல் பொருள் விளக்கம்

1. கற்குவியல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pile of stones, heap of leaves, raised ground

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை – அகம் 91/10

ஆண்மான்கள் தங்கும் பரலையுடைய உயர்ந்த கற்குவியலில்

வெம் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை – குறு 77/2,3

வெம்மையான நிலத்தில்
கொல்லப்பட்ட பயணியரின் தழையிட்டு மூடிய குவியல்

பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி – புறம் 264/1

பருக்கைக்கற்களையுடைய இடத்து மேட்டைச் சேர்த்தி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *