சொல் பொருள்
பந்தல் – (சாவுக்) கொட்டகை
சொல் பொருள் விளக்கம்
கொடி படர்தற்கு அமைக்கப்படும் பந்தல் கொடிப் பந்தல்; தண்ணீர் வழங்குவதற்கென அமைக்கப்பட்ட கொட்டகை தண்ணீர்ப் பந்தல். அவ்வாறே திருமண விழாவுக்கென அமைக்கப்படுவது திருமணப் பந்தல். ஆனால் நகரத்தார் நாட்டில், பந்தல் என்பது இறப்பு வீட்டில் போடப்படுவது என்னும் வழக்குண்டு. திருமண வீட்டில் போடப்படுவது காவணம் எனப்படும். இறப்பு வீட்டுப் பந்தலில் வாழை முதலியவை நடுதலோ, தொங்கல் விடுதலோ இல்லை. சிறப்பு நிகழ்ச்சிப் பந்தலுக்கு இவையுண்டு. இதனைக் கொண்டே ‘காவணம்’ என வேறுபடுத்திக் காட்டும் வழக்கு உண்டாயிற்றாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்