Skip to content

பனிக்கட்டி வைத்தல்

சொல் பொருள்

பனிக்கட்டி வைத்தல் – புகழுரைத்தல்

சொல் பொருள் விளக்கம்

ஆங்கில மரபில் வந்து வழங்குவது இவ்வழக்கம். தமிழில் பன்னீர் தெளித்தல் என்பது இத்தகையது. ‘’ என்பது பனிக் கட்டி. சிலர் புகழ்ந்துரைக்கக் கேட்டவுடன் “போதும் போதும்; தலைகனத்துப் போகும்; தடிமம் பிடித்து விடும்; இதற்குமேல் தாங்காது “எனத் தம் தலைமேல், கைவைத்துப் பனிக்கட்டி வைத்தலைத் தவிர்க்க முயல்வோர் எனினும் அவருக்கும் தம் புகழ் கேட்கும் அளவில் உள்ள ஒரு கிளுகிளுப்பு இருக்கவே செய்யும். தாம் விரும்புவதை நிறைவேற்றிக் கொள்ளப் பனிக்கட்டி வைத்தல் போலச் செலவிலா எளிய வழி ஒன்றும் இல்லை எனலாம்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *