சொல் பொருள்
(பெ) 1. கொட்டையும் கோதும்நீக்கி நூற்பதற்கு ஏற்பத் தூய்மை செய்யப்பட்ட பஞ்சு, 2. சொல், 3. பாட்டு, 4. நூல், 5. கேள்வி,
சொல் பொருள் விளக்கம்
1. கொட்டையும் கோதும்நீக்கி நூற்பதற்கு ஏற்பத் தூய்மை செய்யப்பட்ட பஞ்சு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
toused cotton, cotton that has been pulled and cleaned, word, speech, musical composition, song, treatise, learning through oral instruction
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருத்தி_பெண்டின் பனுவல் அன்ன நெர்ப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை – புறம் 125/1,2 பருத்தி நூற்கும் பெண்டினது சுத்தம் செய்யப்பட்ட பஞ்சுபோன்ற நெருப்பு தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய நிணம் அசைந்த கொழுவிய ஊந்தடிகளை தண்ணம் துறைவன் தூதொடும் வந்த பயன் தெரி பனுவல் பை தீர் பாண – நற் 167/5,6 குளிர்ச்சியாயுள்ள அழகிய துறையைச் சேர்ந்தவனின் தூதோடும் வந்த நீ பெறும் பயனுக்குத் தக்கவாறு கூறும் சொற்களையுடைய வருத்தம் தீர்ந்த பாணனே! கை கவர் நரம்பின் பனுவல் பாணன் – நற் 200/8 கையினால் தடவுதற்குரிய நரம்பினால் இசைக்கும் பாட்டுக்களைக் கொண்ட பாணன் மாசு இல் பனுவல் புலவர் புகழ் புல நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை – பரி 6/7,8 குற்றமில்லாத நூல்களைக் கற்ற புலவர்கள், புகழுடைய அறிவினைக் கொண்ட தம் நாவால் பாடிய வையை ஆற்றைப் பற்றிய நல்ல கவிதைகள் பொய்படாமல் நிலைநிற்கச் செய்ய, பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல் வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என – புறம் 237/4,5 பொய் கூறுதலை அறியாத அறிவுடையோனது செவியிடத்து நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர் நன்றாக விளைந்தது என நினைத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்