Skip to content

பனைக்கொடியோன்

சொல் பொருள்

(பெ) பலராமன்,

சொல் பொருள் விளக்கம்

பலராமன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Balaraman

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் – பரி 2/22,23

எதனையும் மறைக்கும் இருள் நிற ஆடையை உடைய, பொன்னாலான பனைக்கொடியானாகிய பலதேவனுக்கு
முற்பட்டவன் ஆவாய் என்போர்க்கு முதியவனாக இருப்பதுவும்,

கடல் வளர் புரி வளைபுரையும் மேனி
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும் – புறம் 56/3,4

கடற்கண்ணே வளரும் புரிந்த சங்கைஒத்த திரு நிறத்தையுடைய
கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியை உடையோனும்

பால் நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல் நிற உருவின் நேமியோனும் என்று – புறம் 58/14,15

பால்போலும் நிறத்தையுடைய பனைக்கொடியை உடையோனும்
நீல நிறம் போலும் திருமேனியைக் கொண்ட ஆழியை உடையோனும் என்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *