சொல் பொருள்
(பெ) பயன், நன்மை, பலன்
சொல் பொருள் விளக்கம்
பயன், நன்மை, பலன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
profit, gain, advantage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 67,68 மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும் அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்; கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் – மலை 47 குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில், மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால் – பதி 64/18 மழையைக் காட்டிலும் பெரிதான நன்மையினைப் பொழிகிறாய், அதனால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்