சொல் பொருள்
பயறுபோடல் – இறுதி கடன் கழித்தல்
சொல் பொருள் விளக்கம்
பயறு போடல், பச்சை போடல், பாலூற்றல், தீயாற்றல், கொள்ளி வைத்தல், குடமுடைத்தல், மாரடித்தல் என்பனவெல்லாம் இறந்தார்க்குச் செய்யும் கடன்கள். இவை மற்றை மற்றை வழிகளில் வழங்குமாயினும் அவை நேர் பொருளன்றி வழக்குப் பொருள் தருவனவல்ல. பயிறு போடல் என்பது பயற்றை விதைத்தலையோ, பானையில் போட்டு வைத்தலையோ, கறிக்குப் பயன்படுத்தலையோ குறியாமல் இறந்தார்க்குச் செய்யும் இறுதிக் கடனாகச் சொல்லப்படுதலே வழக்கு சொல்லாட்சியாம். இறந்தவர் புதைகுழியை மெழுகிப்பயறு போடுதலும், மாரடிப்பார்க்குப் பயறு போடுதலும் வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்