சொல் பொருள்
(பெ) பிசின், கோந்து,
சொல் பொருள் விளக்கம்
பிசின், கோந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
resin, glue
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இதையும் கயிறும் பிணையும் இரிய சிதையும் கலத்தை பயினான் திருத்தும் திசை அறி நீகானும் போன்ம் – பரி 10/53-55 பாயும், கயிறும், மரங்களும் பிடுங்கிக்கொண்டு சிதறிப்போக, சிதைந்துபோன பாய்மரக்கப்பலை பிசின்கொண்டு சேர்த்துக்கட்டி சீர்திருத்தும் திசையறிந்து ஓட்டும் நீகானின் செயலைப் போலிருந்தது; பயின் என்றால் அரக்கு, சாதிலிங்கம் (vermilion) என்றும் கூறுவர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்