சொல் பொருள்
(வி) 1. அடர்ந்திரு, 2. பழகு, 3. நடமாடு, 4. கல், கற்றறி, படி, 2. (பெ.அ/வி.அ). பலகாலும்
சொல் பொருள் விளக்கம்
1. அடர்ந்திரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be thick, dense, gain acquaintance, move around, roam about, learn by training and practice, many a times
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42 மந்திகளும் ஏறிஅறியாத மரங்கள் செறிந்த பக்கமலையில், பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார் செய்_பொருள் தரல் நசைஇ சென்றோர் – குறு 254/5,6 தாம் பழகிய மணமுள்ள கூந்தலில் படுத்திருந்ததையும் நினைத்துப்பார்க்காதவராய், ஈட்டுவதற்குரிய பொருளைக் கொண்டுவரும்படி விரும்பிச் சென்றோர் மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம் – அகம் 344/6 மயில்கள் உவகையுடன் உலாவும் மரங்கள் அடர்ந்த காட்டு நெறியில் படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும் – பரி 16/12 ஓங்கியடிக்கும் கண்களைக் கொண்ட இசைக்கருவிகளின் ஒலியினையும், பாட்டினையும் கற்ற கூத்துமகளிர் ஆடுகின்ற ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் நீடு இன்று ஆக இழுக்குவர் – அகம் 18/11,12 இடையூறு இல்லாத வழிகளில்கூட, பலகாலும் போய்வருபவர்கள் நீண்ட நாட்கள் அவ்வாறின்றித் தவறிவிடுவர், ஒருநாள் செல்லலம் இரு நாள் செல்லலம் பல நாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ – புறம் 101/1-3 யாம் ஒருநாள் செல்லேம், இரண்டு நாள் செல்லேம் பலநாளும் பலகாலும் பலரோடு கூடச்செல்லினும் முதற்சென்ற நாள் போன்று விருப்பதை உடைய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்