சொல் பொருள்
(வி) 1. குவியலைப் பரவலாக ஆக்கு, பரப்பிவிடு, 2. பரவலாக எங்கும் செலுத்து, 3. பரவுமாறு செய், பலரும் அறியச்செய், 4. மணம், ஒளி போன்றவை எங்கும் நிறையுமாறுசெய், 5. (கை,கால்,சிறகு ஆகியவற்றை)விரி,
2. (பெ) 1. இடவிரிவு, 2. கடலின் மேற்பாகம், 3. பரந்த நிலம், 4. பரவியிருத்தல்
சொல் பொருள் விளக்கம்
1. குவியலைப் பரவலாக ஆக்கு, பரப்பிவிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spread, lay out
spread as water on a surface
publicize, spread widely
diffuse fragrance, light etc.,
expand, outstretch as hands, legs or wings
expanse
the surface of sea
wide area of land
overspreading
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுற்றிய பிணர சூழ் கழி இறவின் கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும் துறை நணி இருந்த பாக்கமும் – நற் 101/2-5 சுற்றிலும் அமைந்த சொரசொரப்பையுடைய, சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின் கூட்டமான குவியல் வெயிலில் காயும் வகையை ஆராய்ந்து புன்னைமரத்தின் அழகிய மிகுதியான நிழலுக்கு முன்பாகப் போட்டுப் பரப்பிவிட்டிருக்கும் கடற்கரைத் துறைக்கு அண்மையில் இருந்த குடியிருப்பும் பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி செய்யில் பொலம் பரப்பும் செய்வினை ஓயற்க – பரி 10/127,128 தங்கத்தைச் சொரிகின்ற பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி, நாட்டின் வயல்களில் பொன்னைப் பரவலாக்கும் செயலாகிய தொழில் ஓய்ந்துபோகாமல் இருக்கக்கடவது! நான்மறையோர் புகழ் பரப்பியும் – பட் 202 அந்தணர்க்குள்ள புகழைப் பரவுமாறு செய்தும் விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73 விரிந்த கிரணங்களை எங்கும் நிறைத்த அகன்ற இடத்தையுடைய ஞாயிறு மணி_வயின் கலாபம் பரப்பி – சிறு 15 (நீல)மணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து, பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க – அகம் 60/1 பெரிய கடல் பரப்பில் சிவந்த இறால் மீன் நடுங்க மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப – நற் 215/5,6 மீனின் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்யால் எரியும் ஒள்ளிய விளக்கொளியை நீல நிறப் பரப்பில் அலையாடும் திரைகள் எற்றித்தள்ள, அருவி பரப்பின் ஐவனம் வித்தி – குறு 100/1 அருவி விழும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து கடாஅம் சென்னிய கடுங்கண் யானை இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா – பதி 25/2,3 மதம் சொரியும் தலையைக்கொண்ட கடுமையாய்ப் பார்க்கும் யானைகளின் கூட்டம் பரந்து சென்ற நிலங்கள் இனி வளம் பரப்புதலை அறியமாட்டா;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்