சொல் பொருள்
(பெ) நிலப்பரப்பு / நீர்ப்பரப்பு
சொல் பொருள் விளக்கம்
நிலப்பரப்பு / நீர்ப்பரப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
expanse (land or sea)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழம் பல் நெல்லின் பல் குடி பரவை – அகம் 44/16 பழமையான பலவான நெல்லையுடைய பல குடிப் பரப்பினை உடையதும் தெண் கடல் முழங்கு திரை முழவின் பாணியின் பைபய பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும் – நற் 378/2-4 தெளிந்த கடலில் முழங்கும் அலைகளும் முழவு இசைப்பது போன்று மெல்ல மெல்லப் நெடுங்காலம் புண் பட்டவர்களைப் போல நீர்ப்பரப்பில் அசைந்துகொண்டிருக்கும்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்