சொல் பொருள்
(பெ) பறவை வட்டமிடுகை, பறவை இரையைப் பிடிக்க விரையும் கடுமை,
- சுற்றி
- சூழுதல்
- வட்டமிடுகை
சொல் பொருள் விளக்கம்
‘பரிவேட்டித்து’ என்பதற்குச் ‘சுற்றி’ என்னும் பொருளுண்டு என்பது விவேக சிந்தாமணியால் விளங்கும்.
‘பரிவேட்பு’ என்பதற்கு வட்டப் பொருளுண்மை பதிற்றுப் பத்தால் தெளிவாம். “பார்வற் கொக்கின் பரிவேட்பு” என்பது அது
‘பரிவேடணம்’ என்பதற்குச் சூழுதல் பொருளுடை மையைச் சங்கத்தமிழ் அகராதி சொல்லும்.
‘பரிவேடபுடம்’ என்பதற்கு ஆறு ஓரை சேரப் பரிவேடமாம் என மருத்துவ அகராதி உரைக்கும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Circling, hovering, as of a bird;
the intensity of the pounce of a bird on its prey
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா – பதி 21/26,27 நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்