சொல் பொருள்
(வி.எ) 1. அறுத்து, 2. அறுபட்டு
2. (பெ) 1. பருவி, பருத்தி, 2. பரி, கதி, குதிரை நடை,
சொல் பொருள் விளக்கம்
1. அறுத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cutting off, cut off, cotton plant, pace of a horse
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கள்ளி மீமிசை கலித்த வீ நறு முல்லை ———————— —————————— வன் கை இடையன் எல்லி பரீஇ வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/4-8 கள்ளிச் செடியின் உச்சியில் வெகுவாய்ப் பூத்திருக்கும் பூக்களைக் கொண்ட முல்லையின் கொடிகளை ————————————- ————————————– வலிமையான கையையுடைய இடையன் மாலைவேளையில் அறுத்து, வெண்மையான பனங்குருத்துடன் சேர்த்துத் தைத்த, மார்பில் அசைகின்ற அழகிய மாலை செந்நாய் ஏற்றை கேழல் தாக்க இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின் – அகம் 21/18-20 ஆண் செந்நாய் ஆண் காட்டுப்பன்றியைத் தாக்க, பதறியோடும் பெண்பன்றி உராய்தலால் அறுபட்டு, செங்காய்கள் உதிரும் பசுங்குலைகளைக் கொண்ட ஈந்தின் பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே – குறு 72/4,5 பருத்தி விதைத்த தினைப்புனத்தில் குருவிகளை ஓட்டுவாளின் பெரிய குளிர்ந்த கண்கள் நீயே அலங்கு உளை பரீஇ இவுளி பொலம் தேர் மீமிசை பொலிவு தோன்றி மா கடல்நிவந்து எழுதரும் செஞ்ஞாயிற்று கவினை மாதோ- புறம் 4/13-16 நீதான், அசைந்த தலையாட்டம் அணிந்த கதியையுடைய குதிரையால் பூட்டப்பட்ட பொன் தேரின் மேலே பொலிவோடு தோன்றுதலால் கரிய கடலின்கண்ணே ஓங்கி எழுகிற சிவந்த ஞாயிற்றினது ஒளியையுடையை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்