சொல் பொருள்
ஆட்டுக்குட்டியைப் பால் குடிக்கச் செய்தலைப் பருக்குதல் என்பது ஆயர் வழக்கு
சொல் பொருள் விளக்கம்
ஆட்டுக்குட்டியைப் பால் குடிக்கச் செய்தலைப் பருக்குதல் என்பது ஆயர் வழக்கு. தானே தாயை அடுத்துப் பால் குடியாக் குட்டியைப் பால் குடிக்கவைப்பது பருக்குதல் ஆகும். பருகச் செய்தல் பருக்குதல். இவ் வழக்கு பொதுவழக்காகவும் கூறும் அளவில் அறிய வாய்க்கின்றது. முகவை, மதுரை வட்டாரங்களுடன் திருச்சி வட்டாரத்திலும் கேட்கும் சொல்லாக உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்