Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மேகலை, அரைப்பட்டிகை, 2. குதிரைகளின் சேணம், saddle, 3. யானைக்கான அலங்காரக் கழுத்து மெத்தை

  • மகளிரின் திரண்ட மார்பகம் ‘பருமம்’ எனப்படும்
  • அரைப்பட்டிகை
  • களிற்றின் கழுத்து மெத்தை

சொல் பொருள் விளக்கம்

மகளிரின் திரண்ட மார்பகம் ‘பருமம்’ எனப்படும். கொம்மை, கொழுமை என்பன போல அதனியல் விளக்கும் பெயராம். பெண்டிர் அழகென உறுப்பிலக்கணம் சொல்லும் நூல்கள் மார்பகப்பருமை சுட்டுதலும், கோயிற் சிற்பங்களில் காணப்படும் அணங்குகளின் உடற்கூறும் காண்பார்
இப்பெயரமைதி பொருந்து மாற்றை அறிவர். இவ்வமைப்பும் பருவத்திரட்சியொடும் கூடியது என்பதும் சொல்லமைப்பால் கொள்ளத் தக்கதாம். மகளிர், பருத்த தொடைப்புறம் குறிப்பது ‘பருமம்’ என்பது யாழ்ப்பாண அகராதி.

அரைப்பட்டிகையைக் குறிப்பது என்பது முருகாற்றுப் படை. அது பதினெட்டு வடங்கொண்டது என்னும் பருமை சுட்டியது என்பது அறியற்பாலது (146). களிற்றின் கழுத்து மெத்தை என்பது கலித்தொகை (97). குதிரையின் கலணை என்பது நெடுநல்வாடை (179).

பருமம் பருமை என்பது உலக வழக்கு, பருமன் என்பது அது. அம்பாரியைப் ‘பருமக்கட்டு’ என்றும் (உயுத். 3360) பிடரில் தவிசைத் தாங்கிய யானை “பருமயானை” என்றும் (அயோத். 2) கம்பரால் குறிப்பிடப்படும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Women’s waist-band consisting of 18 strings of beads and gems

saddle

ornamental cushion on elephant’s neck

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146

மேகலையை அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும்

பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 179

சேணம் களையப்பெறாத பாயும் ஓட்டத்தையுடைய செருக்கின குதிரைகள்

பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 89/8

மேல் அலங்காரம் கொண்ட யானை அயர்ந்து பெருமூச்சு விட்டதைப் போன்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *