பொருள்
பருமை என்பது பருத்திருத்தல், பெருமை என்பவற்றை வெளிப்பட உணர்த்தும்
விளக்கம்
பருமை என்பது பருத்திருத்தல், பெருமை என்பவற்றை வெளிப்பட உணர்த்தும். பருஞ்சோளம், பருங்கீரை, பருந்தேக்கு, பருநெல், பருப்பொருள், பரும்படி, பருமட்டம், பருவட்டு, பருவுடல் இவ்வாறு பருமை சுட்டிய அடையாக வருவது பெருவழக்கு. ‘பரு’ ‘பெரு’ என்றும் ஆகும்.
பெருந்தீனி, பெரும்பாடு, பெருங்காயம், பெருங்கோழி இவ்வாறு பருமை பெருமையடையாக வருதல், பருமிதம் எனவும் வழங்கும்.
பருவல் என்பது பருமை என்னும் பொருளில் வழங்குதல் உலக வழக்கு.