சொல் பொருள்
(பெ) துன்பம்
சொல் பொருள் விளக்கம்
பொறுக்க முடியாத் துயர்
இடுக்கண்
பழங்கண்
புன்கண்
துன்பம்
துயர்
இன்னல்
அல்லல்
எஞ்சிய துயரச் சொற்களிலும் விஞ்சிய துயரை விளக்குவது பருவரல் என்பதை அதன் பருமையே காட்டும் – இரா. இளங்குமரன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suffering, affliction
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருவரல் எவ்வம் களை மாயோய் என - முல்லைப்பாட்டு 21 துன்பத்தைத் தரும் வருத்தத்தைக் களைவாய், மாமைநிறத்தவளே என்று பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் - தொல்காப்பியம் 1097 பசப்புறு பருவரல் - திருக்குறள், காமத்துப்பால், அதிகாரம் 119 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு - குறள் எண்:1240 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான் - குறள் எண்:1197 பருவரல் – எவ்வாற்றானும் பொறுக்கமுடியாத துன்பம் எவ்வம் – எதனினும் தீராத வருத்தம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்