சொல் பொருள்
(பெ) பரு, பருமை,
சொல் பொருள் விளக்கம்
பருமைப் பொருளதாதல், பருத்த, பெரிய
சொல்வளம்:
பரூஉச்சுடர், பரூஉச்செவி, பரூஉத்தொடி, பரூஉக்கண், பரூஉக்கரை, பரூஉக்காழ், பரூஉக்குடர், பரூஉக்குரல்,பரூஉக்கை
பரூஉத்தாள், பரூஉத்திரி, பரூஉப்பகடு, பரூஉப்பணை, பரூஉப்பெயல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
thickness, rotundity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரூஉ என்பதனை மனக்காட்சியாய்க் காணப் பல்வேறு எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை – பொரு 171 வெருட்டும் பறைகள் (போன்று)முழங்கும், பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும், எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 48 (இரண்டு)கணைய மரங்களையும் சேர்த்தாற் போன்ற பருத்த கைகளையுடைய, வலிய, கோக்கும் சட்டத்தையும், பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85 பாவை (ஏந்திநின்ற)தகளியில் பரிய தீக்கொழுந்து நின்றெரிய, பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 103 பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை, பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 681 பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடு, பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு – மலை 168 பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன், பரூஉ கொடி வலந்த மதலை பற்றி – மலை 216 பருத்த கொடிகள் பின்னியவற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு, பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி – மலை 516 பருமனான பளிங்குக்கல்லை (உடைத்து)உதிர்த்துவிட்டதைப்போன்ற பலவித அழகிய மணிகளும், எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் – நற் 98/1 முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட, பரூஉ பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் – பதி 71/4 பெருத்த எருதுகள் போரடிக்குபோது மிதித்து உதிர்த்த மென்மையான செந்நெல்லின் பதி எதிர் சென்று பரூஉ கரை நண்ணி – பரி 10/26 ஊரார் அனைவரும் ஆற்றுக்கு எதிரே சென்று, ஆற்றின் பெரிய கரைகளை அடைந்து, பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப – அகம் 107/20 புதிய தேனையுடைய நறிய பூக்கள் பெரிய பாறைக்கற்களில் உதிர்ந்து கிடக்க பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று – அகம் 218/4 பரிய பலவாகிய மழைத்துளிகளைச் சிதறி பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன – அகம் 224/6 பால் கடையும்போது எழும் வெண்ணெயின் பெரிய உருண்டையான மிதப்பினை ஒத்த பள்ளி யானை பரூஉபுறம் தைவரும் – அகம் 302/3 துயில் கொள்ளும் யானையின் பரிய உடம்பினைத் தடவும் இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை – புறம் 228/2 இருள் ஓரிடத்தே செறிந்து நின்றாற் போன்ற நிறமுடைத்தாய் திரண்ட பருமைமிக்க புகை தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி – புறம் 399/2 பூணிட்டு மாட்சியுறுவித்த பருத்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசி பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல் ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின் குறுந்தொகை: 213
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்