சொல் பொருள்
பறையறைதல் – விளம்பரமாகச் சொல்லல்.
சொல் பொருள் விளக்கம்
“அவனிடம் ஒன்றைச் சொன்னால் போதும்; பறையறைந்து விடுவான்” என்பது, பலருக்கும் தெரியப்படுத்தும் விளம்பரப் பொருளாகப் பறையறைதலைக் குறிக்கிறதாம். தமுக்கடித்தல் என்பதும் இத்தகையதே. முந்தித் தருவதாகப் பறையறையும் செய்தித் தாள்களினும் முந்திப் பரப்பவல்ல திருவாயர்கள் பலர். அவர் பழங்காலந்தொட்டே இருந்து வருகின்றனர். அவர்கள் பறையறைபவர் போலக் கருதப்பட்டனர் என்பது “அறை பறையன்னர் கயவர்” எனவரும் குறளால் வெளியாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்