சொல் பொருள்
(பெ) பயன், (வி.மு) பலர் இருக்கின்றோம்
ஒரு நிறைகல் (எடைக்கல்)
மாடு பலப்பட்டிருக்கிறது என்பதும் பயிர் பலன்(ம்) பிடித்திருக்கிறது என்பதும் உழவர் வழக்கு ஆகும்
சொல் பொருள் விளக்கம்
பலம் என ஒரு நிறைகல் (எடைக்கல்) இருந்தது. பலம் வலிமைப் பொருளிலும் வழங்கும். அது வலம் என்பதன் திரிபாகும். இனி மாடு பலப்பட்டிருக்கிறது என்பதும் பயிர் பலன்(ம்) பிடித்திருக்கிறது என்பதும் உழவர் வழக்கு ஆகும். மாட்டுத் தரகர் வழக்கிலும் முன்னது உண்டு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
benefit, fruit, we are many
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும் புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் – மலை 411,412 பரிசிலாகிய பயனைப் பெறும் ஆசையோடு ஊரிலிருந்து வந்த உம்முடைய வருத்தம் வெகுதூரம் போய்விட(முற்றிலும் நீங்க), புத்துணர்வுபெற்றவர் ஆவீர்; பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் – புறம் 301/11 நாங்கள் பலர் இருக்கின்றோம் எனத் தருக்கி இகழ்வதை ஒழிவீராக.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்