சொல் பொருள்
பல்லைப் பிடித்துப் பார்த்தல் – ஆராய்தல்
சொல் பொருள் விளக்கம்
மாடு பிடிப்பார் மாட்டின் அகவையைத் தெரிவதற்குப் பல்லைப் பிடித்துப் பார்ப்பர். அவ் வகையால் பல்லைப் பிடித்தல் ஆராய்தல் பொருள் பெற்றது. அதனால் ஒருவரைப் பற்றி ஒருவர் மற்றொருவரிடம் பலப்பலவற்றைக் கேட்டறிந்தாலும், நேரில் வினவியறியத் தலைப்பட்டாலும், “என்னையே பல்லைப் பிடித்துப் பார்க்கிறான்?” என இகழ்வது உண்டு. “இலவசமாகக் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தானாம்” எனவரும் பழமொழி விலையில்லாப் பொருளை எத்தகையதாயினும் ஓரளவு பயன்படுமெனினும் கொள்க என்னும் பொருளில் வருவதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்