சொல் பொருள்
(பெ) 1. படிகம், மெருகூட்டப்பட்ட சலவைக்கல், 2. உருண்டையான பளபளப்பான கல்
சொல் பொருள் விளக்கம்
1. படிகம், மெருகூட்டப்பட்ட சலவைக்கல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
crystal, marble, polished globular marble
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் – நற் 292/5,6 களிறுகள் சண்டையிட்டுக்கொள்வதால் கரைந்துபோன, பெரிய பள்ளங்கள் களிறுகள் சண்டையிட்டுக்கொள்வதால் கரைந்துபோன, பெரிய பள்ளங்கள் உள்ள குழிவான கரையில் ஒளிறுகின்ற வெள்ளைப் பளிங்குக்கற்களோடு, செம்பொன்னும் மின்னும் பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு_உழி – குறி 57 பளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது, அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/12 நூல் அற்று உதிர்ந்த துளையினையுடைய பளிங்குக் காசுகளை ஒப்ப மை இல் பளிங்கின் அன்ன தோற்ற பல்கோள் நெல்லி பைங்காய் – அகம் 399/13,14 குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்