சொல் பொருள்
(வி) 1. வாழ்த்து, 2. வணங்கு, 3. புகழ்,
சொல் பொருள் விளக்கம்
1. வாழ்த்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
greet, bless, worship, praise
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூவும் புகையும் சாவகர் பழிச்ச – மது 476 பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப, செறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச – மலை 201 நெருக்கமாக வளையல் (அணிந்த) விறலியர் கைகூப்பி வணங்க நாள்-தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி நாள் தர வந்த விழு கலம் அனைத்தும் – மது 694,695 நாள்தோறும் (தமக்குச் செல்வம்)மிகும்படியாகக் கையால் தொழுது புகழ்ந்து, நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்