சொல் பொருள்
(பெ) 1. குற்றம், குறை, 2. பயனின்மை, 3. வறுமை, 4. பொய்
வைக்கோல் புரி
சொல் பொருள் விளக்கம்
பழுது என்பது பயன்படாதது, கெட்டுப் போனது என்பது பொது வழக்கு. “பழுது பயமின்றே” என்பது தொல்காப்பியம். இனி வைக்கோல் புரியைப் பழுது என்பது முகவை, மதுரை மாவட்ட வழக்காகும். பழு என்பது சுமை. அதனைக் கட்ட உதவுவது பழுது ஆயது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fault, flaw, unprofitableness, uselessness, poverty, falsehood
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/7 குற்றமற்றது, இந்த ஆய்ந்த அணிகலன்களை அணிந்தவள் எடுத்த முடிவு சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ – கலி 84/4 சுரந்த என் மென்மையான முலையின் பால் பயனற்றுப் போகும்படி கரிகால்வளவன் தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் கையது கேளா அளவை ஒய்யென பாசி வேரின் மாசொடு குறைந்த துன்னல் சிதாஅர் நீக்கி தூய கொட்டை கரைய பட்டு உடை நல்கி பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என பூ கமழ் தேறல் வாக்குபு தரத்தர – பொரு 148-157 கரிகாற்சோழனின், திருவடி நிழலின் பக்கத்தை அணுகிக் கிட்டே நெருங்கி வணங்கி (அவன்)முன்னே நிற்பீராயின், (உம்)வறுமை நீங்க ஈன்ற பசு (அதன் கன்றை நோக்கும்)விருப்பம் போன்ற விருப்பத்தோடு உம்மை விரும்பிப் பார்த்து, உம் கைத்திறனை(கலையை)(த் தான்) கேட்டு முடிவதற்கு முன்னரே, விரைந்து பாசியின் வேர் போல் அழுக்குடன் சுருங்கிப்போன, தையலையுடைய துணிகளை நீக்கி, தூய (பட்டுக்)குஞ்சம் (உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து, ‘பெறுதற்கரிய (பொற்)கலத்தில் விரும்பியபடி உண்பாயாக’ என்று, பூ மணக்கின்ற கள்தெளிவை (மேலும்மேலும்)வார்த்துத் தரத்தர, அல்கலும் அகலுள் ஆங்கண் அச்சற கூறிய சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/1-3 நாள்தோறும் அகன்ற மனையினுள் இருந்து நமக்கு அச்சம் இன்றாகக் கூறிய சொல் பொய்யாகப்போய்விடும் என்று அஞ்சாமல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்