Skip to content

சொல் பொருள்

(வி) 1. நிறைவடை, 2. முதிர்வடை, 3. முற்றுப்பெறு

சொல் பொருள் விளக்கம்

1. நிறைவடை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be full or perfect

mature

be fully grown or developed

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி
கழை வளர் நவிரத்து மீமிசை – மலை 578,579

வளம் குன்றுதல் இல்லாது, வாய்த்த வளமும் செழித்துமிகுந்து(உள்ள),
மூங்கில் வளரும் நவிரமலையின் உச்சியில்

இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்
நெடும் கண் ஆடு அமை பழுநி – அகம் 348/5,6

தேனுடன் கூட்டியாக்கியவண்டு மொய்க்கும் அரியலாகிய
அசையும் மூங்கிலின் நீண்ட கணுவிடையுள்ள குழாயில் நெடிது இருந்து முதிர்தலின்

நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36

நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *