பவளம் என்பதன் பொருள்நவமணிகளுள் ஒன்று, பவழம்.
1. சொல் பொருள்
(பெ) நவமணிகளுள் ஒன்று, பவழம்,
2. சொல் பொருள் விளக்கம்
ஒருவகைக் கடல் வாழ் உயிரினமாகும். பவளம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். நகை செய்வதற்குப் பயன்படும்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை பவள செம் வாய் பைம் கிளி கவரும் – நற் 317/3,4 தோகை நுனி பிரிந்து வளைந்த நீண்ட கதிர்களையுடைய பசிய தினையைப் பவளம் போன்ற சிவந்த வாயையுடைய பச்சைக் கிளிகள் கவர்ந்துண்ணும் மணி மிடை பவளம் போல அணி மிக - அகம் 304/13 மணி மண்டு பவளம் போல காயா - அகம் 374/13 பவளம் சொரிதரு பை போல் திவள் ஒளிய - கள40:14/2 பொன்னுள் உறு பவளம் போன்ற புணர் முருக்கம் - திணை150:67/3 பாகு பொதி பவளம் திறந்து நிலா உதவிய - சிலப்.புகார் 8/80
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்