Skip to content

சொல் பொருள்

(வி) 1. பரப்பு, 2. பரவு,

சொல் பொருள் விளக்கம்

1. பரப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

get spread, spread

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சுடர் பூ கொன்றை தாஅய நீழல்
பாஅய் அன்ன பாறை அணிந்து – மது 277,278

ஒளிவிடும் பூக்களுடைய கொன்றை பரந்த நிழலில்,
பரப்பினாற் போன்ற பாறை அழகுபெற்று,

செல்லிய முயலி பாஅய சிறகர்
வாவல் – ஐங் 378/1,2

பறந்து செல்வதற்கு முயன்று விரித்துப் பரப்பிய சிறகினையுடைய
வௌவால்

மா கடல் முகந்து மணி நிறத்து அருவி
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் – நற் 112/6,7

கரிய கடலின் நீரை முகந்துகொண்டு, நீலமணியின் நிறத்தைக் கொண்ட அருவியிலிருந்து
கீழே விழும் நீர் அகன்ற இடமெல்லாம் புதைபடுமாறு பரவி,

அம் கலுழ் மேனி பாஅய பசப்பே – குறு 143/7

அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலைநோய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *