Skip to content
பாங்கர்

பாங்கர் என்பதுஉகாய் மரம்.

1. சொல் பொருள்

(பெ) 1. உகா, ஓமை, 2. பக்கம், அணிமை, 3. தோழமையுள்ளவர்,

2. சொல் பொருள் விளக்கம்

உகாய், அராக்மிஸ்வாக் என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்படும் ஒரு செடி. இதனை இக்காலத்தில் அம்மாம் பச்சரிசிச் செடி என்பர். உகாய் பாலை நிலத்து மரங்களில் ஒன்று. காய்கள் உருண்டையாய் சிவப்பு நிறத்திலும், இலைகள் முட்டை வடிவிலும் இருக்கும். இவை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பூத்து, மார்ச் மாதங்களில் காய்ப்பவை.

காயிலிருந்து வெடித்து உதிரும் இதன் விதை மிளகைப்போல் காரம் உடையது. பறவைகள் இவ்விதைகளை உண்ணும். முகம்மது நபியவர்கள் இதன் குச்சிகளைப் பல் துலக்கப் பயன்படுத்தியுள்ளார்.

பாங்கர்
பாங்கர்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Tooth-brush tree, s. tr., Salvadora persica, side, neighbourhood, companion, Galenia asiaticaSalvadora indica

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் – குறி 85

ஓமை, மரவம்பூ, பல பூக்களையுடைய தணக்கம்பூ,

குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர் – கலி 103/3,4

கஞ்சங்குல்லைப் பூவும், குருந்தம்பூவும், செங்காந்தளும், பாங்கர்ப்பூவும் ஆகிய
மலையிலுள்ளவையும், காட்டிலுள்ளவையும் உள்ள மலர்கள் கொண்டு கட்டிய பூச்சரங்களைச் சூடியவராய்,

வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/5-7

வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது 

தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர்
படாகை நின்றன்று – பரி 9/77,78

தடாகத்தைப் போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்தில்
கொடி உயர்ந்து நின்றது;

பதிவதமாதர் பரத்தையர் பாங்கர்
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/23-25

பதிவிரதம் இருக்கும் கற்புடைய மகளிரும், பரத்தையரும், அவருக்குத் தோழியரும்,
அதிரும் குரலையுடைய, இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள
விதியால் கூட்டப்பட்ட, பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல

ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர்
மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய் - திணை50:13/1,2

பாசி பசும் சுனை பாங்கர் அழி முது நீர் - கைந்:3/1

பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் - குறி 85

பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என - நற் 98/5

பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்/நெடு நிலை யாஅம் ஏறும் தொழில - நற் 186/6,7

தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர்/படாகை நின்றன்று - பரி  9/77,78

பதிவத_மாதர் பரத்தையர் பாங்கர்/அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள - பரி  10/23,24

ஆங்கு இள மகளிர் மருள பாங்கர்/பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் - பரி  19/74,75

பாங்கர் பல்லி படு-தொறும் பரவி - அகம் 9/19

ஓங்கு வணர் பெரும் குரல் உணீஇய பாங்கர்/பகு வாய் பல்லி பாடு ஓர்த்து குறுகும் - அகம் 88/2,3

தேம் படு சிமய பாங்கர் பம்பிய - அகம் 94/1

குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்/கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர் - கலி  103/3,4

பூ கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ பாங்கரும்/முல்லையும் தாய பாட்டம்-கால் தோழி நம் - கலி  111/3,4
உகாய்
உகாய்
பாங்கர் அங்கு படர்குற்றனர் அன்றே - சிந்தா:7 1768/4

பல்லியும் பட்ட பாங்கர் வரும்-கொலோ நம்பி என்று - சிந்தா:8 1909/2

பைம் தொடி மகளிர் பாங்கர் பரிந்து நூல் சொரிந்த காசு - சிந்தா:12 2528/1

குடை குழாம் இவற்றின் பாங்கர் குளித்தது குளிர் சங்கு ஆர்க்கும் - சிந்தா:13 3050/3

ஒருவன் பாங்கர் உளம்வைத்து ஒழுகும் - உஞ்ஞை:35/68

பாங்கர் மெல் அணை பள்ளியும் பரிவு உற வழங்கி - வில்லி:3 127/3

படர் உற கண்டு தன் பாங்கர் நின்றது ஓர் - வில்லி:21 33/3

பற்றிய திலகம் போல படுதலும் பாங்கர் நின்ற - வில்லி:22 125/3

பாடியும் களமும் சூழ்ந்த பாங்கரும் அங்குமிங்கும் - வில்லி:46 125/1

பவள மாலிகை நான்றன போன்றன பாங்கர் - சீறா:1110/4

பாங்கர் அப்துல்லா எனும் அ பாலனுடனும் இனிது இருப்ப - சீறா:2556/3

பாங்கரில் கறங்கு என திரித்தனன் வய பரியை - சீறா:3517/4

பாங்கரின் சருவந்து அணிந்து அரும் படைக்கலன்கள் - சீறா:3473/3

பரி திரள் நிரைநிரைப்படுத்தி பாங்கரின்
விரித்து ஒளிர் படங்குகள் விளங்க கோட்டி நல் - சீறா:3632/1,2

அண்டர் உடன் தவசு ஏந்து மாதவர் புண்டரிகன் திரு பாங்கர் கோ என - திருப்:763/9

தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:743/3

பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒரு-பால் பாங்கர்
விரை நறும் குழலார் சிந்தும் வெள் வளை ஒரு-பால் மிக்க - 1.திருமலை:3 21/1,2

பாசனத்து அமைந்த பாங்கர் பரு மணி பைம்பொன் திண் கால் - 1.திருமலை:5 15/2

நித்தில அருவி சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்
மத்த வெம் களிற்று கோட்டு வன் தொடர் வேலி கோலி - 3.இலை:3 2/2,3

பொன் தட வரையின் பாங்கர் புரிவுறு கடன் முன் செய்த - 3.இலை:3 41/1

பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும் - 4.மும்மை:1 36/4

பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர் - 4.மும்மை:5 97/4

மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர்
கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் - 5.திருநின்ற:4 41/3,4

நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் - 5.திருநின்ற:6 30/3,4

பாங்கர் வரையும் குளிரும் பனி பருவம் எய்தியது-ஆல் - 6.வம்பறா:1 328/4

பற்றி எழும் காதல் மிக மேல்மேல் சென்று பரமனார் திறத்து உன்னி பாங்கர் எங்கும் - 6.வம்பறா:1 484/3

சிற்று இடை பொன் தொடி பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழ சிந்தை செய்து - 6.வம்பறா:1 492/3

பாங்கர் திலதை பதி முற்றமும் பணிந்து - 6.வம்பறா:1 549/2

தண் துணர் முடியின் பாங்கர் தமனிய பீடம் காட்ட - 6.வம்பறா:1 752/2

பண் நீர்மை மொழி பரவையார் கொழுநர் வரும் பாங்கர்
கண் நீடு திரு நுதலார் காதல் வர கருத்து அறிந்து - 6.வம்பறா:2 156/2,3

பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூ வனங்கள் - 7.வார்கொண்ட:4 142/1

தூய மென் பள்ளி தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர்
மேயது ஓர் புது பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள் - 10.கடல்:1 5/3,4

பூம் திருப்பாதிரிப்புலியூர் பாங்கரில் - 5.திருநின்ற:1 131/4

பல் நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் - 8.பொய்:4 5/2

பாங்கர் கயிலை பராபரன்-தானும் - திருமந்:390/2

நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே - தேவா-சம்:844/3,4

கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே - தேவா-சம்:847/3,4

பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2218/4

பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி - தேவா-அப்:467/3

பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி - தேவா-அப்:468/2

பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் - தேவா-அப்:2248/2

பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2447/4

பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று - தேவா-அப்:500/1

பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய்
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி - தேவா-சம்:48/2,3

பண்டரங்கர் பராய்த்துறை பாங்கரை
கண்டுகொண்டு அடியேன் உய்ந்து போவனே - தேவா-அப்:1374/3,4

பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர்
கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் - பால:2 2/3,4

அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர்
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல - பால:16 22/1,2

ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த - பால:20 3/2

பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச - ஆரண்:3 57/4

வில் இயல் தட கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க - ஆரண்:5 6/1,2

அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர்
பனி தரு தெய்வ பஞ்சவடி எனும் பருவ சோலை - ஆரண்:5 7/1,2

கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும் - ஆரண்:6 50/2

பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளி பாங்கர்
தேவிமார் குழுவும் நீங்க சேர்ந்தனன் சேர்தலோடும் - ஆரண்:10 89/1,2

பயில்வு உற திவலை சிந்தி பயப்பய தழுவும் பாங்கர் - கிட்:2 11/4

பாங்கர் சண்பக பத்தி பறித்து அயல் - சுந்:6 25/3

செம்பொனின் தேரின் பாங்கர் செங்குடை தொங்கல் காடும் - சுந்-மிகை:11 4/1

பற்றிய பகைஞரை கடிந்து பாங்கர் வந்து - சுந்-மிகை:14 31/3

பாங்கர் ஆயினோர் யாவரும் பட்டனர் பட்ட - யுத்3:22 197/3

வெம்பிய எரியின் பாங்கர் விலக்குவென் என்று விம்மும் - யுத்4-மிகை:41 292/2

மன்னவர்க்கு அரசன் பாங்கர் மரபினால் சுற்ற-மன்னோ - யுத்4-மிகை:42 47/4

பண்ணையும் ஆயமும் திரளும் பாங்கரும்
கண் அகன் திரு நகர் களிப்பு கைம்மிகுந்து - பால:5 113/1,2

ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரும்
போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார் - யுத்4:33 34/1,2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *