சொல் பொருள்
பாசம் – அன்பு, பற்று
சொல் பொருள் விளக்கம்
பசுமையான நிறத்தது பாசி; பாசம் என்பதும் அது. அப்பசுமை அன்புப் பொருளில் வழங்குதல் ‘தாய்ப் பாசம்’ என்பதால் புலப்படும். பாசம் – கட்டு, கட்டும் கயிறு என்னும் பொருள்களிலும் வழங்கும், ‘பாசக் கயிறு’ என்பது இருசொல் ஒரு பொருள். கயிற்றால் கட்டுவது போல் அன்பாலும் ஒருவரைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை விளக்கும் சொல்லாட்சி இது. பாசம் சமய உலகில் பற்று என வழங்கும்; ‘பதி பசு பாசம்’ எனவரும் முப்பொருளுள் ஒன்றாதல் காண்க, பாசம் பற்று எதுவும் இல்லை என்பதும் வழக்கில் உள்ளதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்