சொல் பொருள்
(பெ) 1. பசிய அவல், பச்சை அவல், 2. பசிய விளைநிலம்
சொல் பொருள் விளக்கம்
1. பசிய அவல், பச்சை அவல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A preparation of rice obtained by pestling fresh paddy; green field
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை – குறு 238/1 பச்சை அவலை இடித்த கரிய வைரம்பாய்ந்த உலக்கைகளை பாசவல் – நெல்லை வறுத்து இடிக்காமல் பச்சையாக இடித்து இயற்றிய அவல் – பொ.வே.சோ – உரை விளக்கம் பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து – புறம் 6/14 பசிய விளைநிலப் பக்கத்தையுடைய அரிய மதிலரண் பலவற்றையும் கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்