சொல் பொருள்
(பெ) 1. நீர்ப்பாசி, 2. கிழக்கு
சொல் பொருள் விளக்கம்
1. நீர்ப்பாசி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
moss, duckweed, east
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – மலை 221,222 வழுவழுப்பான மெல்லிய ஏட்டால் (கீழுள்ள)தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி (ஊன்றிய)காலின் உறுதியைக் குலைக்கும் (=வழுக்கும்) வழுக்குநிலங்களும் உள்ளன, பாசி செல்லாது ஊசி துன்னாது – புறம் 229/9 கிழக்குத்திசையில் போகாது, வட திசையில் செல்லாது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்