சொல் பொருள்
நீண்டதும் அகன்றதுமான தெரு
சொல் பொருள் விளக்கம்
ஆயர்பாடி என்பது பழமையான ஆட்சி. பாடி என்பது அகலமான தெரு என்னும் பொருளது. இரவில் தொழுவில் மாடுகளைக் கட்டினாலும் பகலில் வெளிப் புறத்தில் மாடுகளைக் கட்டுதல் வழக்கத்தால் அகன்ற தெரு அமைத்தனர். அவ்வாறே தறி நெய்வோர் பாவு போடுதற்கு நீண்டதும் அகன்றதுமாம் தெரு அமைத்துக் கொண்டனர். அத் தெருவைப் பாடி என வழங்கினர். பாவு போடும் இடத்தைப் பாடி எனல் நெசவுத் தொழிலோர் வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்