சொல் பொருள்
(பெ) 1. பாணர் மகளிர், 2. பெற்றோரின் தாய்,
சொல் பொருள் விளக்கம்
1. பாணர் மகளிர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Woman of the class of strolling singers
grandmother
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு —————————————- ——————————- விடியல் வைகறை இடூஉம் ஊர – அகம் 196/4-7 வேட்டம் போதலை மறந்து உறங்கிக்கிடக்கும் கணவன்மார்க்கு, அவரவர் மனைவியரான பாண் மகளிர் ஆம்பலது அகன்ற இலையில் திரண்ட விருப்பம்தரும் சோற்றை —————————— —————— இருள் புலரும் விடியற்காலத்தே இடும் ஊரனே பாணர் வருக பாட்டியர் வருக – மது 749 பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக, மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து தாம் வேண்டும் பட்டினம் எய்தி – பரி 10/37,38 தளர்நடைப் பாட்டியரிடமிருந்து தப்பித்து, தடைகளை மீறிக் காதலரை எதிர்கொள்ள, தாம் நினைக்கும் பட்டினத்தை நோக்கி வந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்