சொல் பொருள்
பாட்டுப் பாடுதல் வறுமையை விரித்துக் கூறுதல்
சொல் பொருள் விளக்கம்
பாட்டுப் பாடுதல் பாடகர் பணி. (பாடகர் – பாகவதர்) அவரைக் குறியாமல் பஞ்சத்துக்கு ஆட்பட்டவர் தம் வறுமையைக் கூறுவதைப் பாட்டுப் பாடுவதாகக் குறித்து வருகின்றதாம். பழம் புலவர்கள் பாடிய புறப்பாடல்களுள் சில வறுமைப்பாட்டாக வெளிப்பட்டு உள்ளது. வறுமையில் பஞ்சாகத் தாம் பறப்பதாகப் பிற்காலப் புலவர்கள் பாடிய தனிப்பாடல்கள் உண்டு. அவ்வழக்குகளில் இருந்து பாட்டுப் பாடுதல் பஞ்சப்பாட்டுப் பாடுதல் என்பவை வறுமைப் பொருள் குறித்து வந்ததாகலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்