சொல் பொருள்
(பெ) 1. மாட்டுவண்டி, 2. எருது, மாடு,
சொல் பொருள் விளக்கம்
1. மாட்டுவண்டி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bullock cart, bull
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகவு அரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/16,17 அதட்டி ஓட்டத் தேவையற்ற மாட்டுவண்டிகள், கோவேறு கழுதைகள், தெரிந்தெடுத்த குதிரைகள் பூட்டிய வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு திண் தேர் புரவி வங்கம் பூட்டவும் வங்க பாண்டியில் திண் தேர் ஊரவும் – பரி 20/16,17 அவசரத்தில் திண்ணிய தேருக்குரிய குதிரைகளை வண்டியில் பூட்டவும், வண்டிக்குரிய மாடுகளைப் பூட்டிக்கொண்டு திண்ணிய தேரில் செல்லவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்