சொல் பொருள்
பாம் பிஞ்சு – மிகப் பிஞ்சு.
சொல் பொருள் விளக்கம்
பூம் பிஞ்சு என்பது பொது வழக்கு. பிஞ்சும் பூவும் இணைந்து நிற்கும் நிலை. வெள்ளரிப் பிஞ்சில் பூம்பிஞ்சை விரும்பியுண்பது வழக்கம். பூம் பிஞ்சு என்பது செட்டி நாட்டு வழக்கில் பாம்பிஞ்சு எனப்படுகிறது. பாவுதல் என்பது ஒன்றி அல்லது பரவி இருத்தல். பூவொடு ஒன்றி இருக்கும் பிஞ்சு பாம் பிஞ்சு எனப்பட்டிருக்கலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்