Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஊர்ந்து செல்லும் உயிரினங்களின் இளமை, 2. பறக்கும் உயிரினங்களின் இளமை

சொல் பொருள் விளக்கம்

1. ஊர்ந்து செல்லும் உயிரினங்களின் இளமை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

youth of the tortoise, frog, toad etc., fledgling

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 186

இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன – பெரும் 167

கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு
இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி – ஐங் 280/1,2

தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு – ஐங் 41/1

ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என
ஆங்கு இள மகளிர் மருள – பரி 19/72-74

(அரவம் = பாம்பு)

நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம்
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் – நற் 356/1-5

பறவை பார்ப்பு_வயின் அடைய – நற் 69/3

மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு
கல் உடை குறும்பின் வயவர் வில் இட
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும்
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன
புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர்
கண் உமிழ் கழுகின் கானம் – அகம் 31/6-11

தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை – அகம் 240/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *