சொல் பொருள்
1. (வி) அழிவடை,
2. (பெ) 1. அழிவு, சீர்குலைந்த நிலை, 2. அழிபாடு அடைந்த இடம்
சொல் பொருள் விளக்கம்
அழிவடை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
go to ruin, ruin, dilapidated condition, place in ruins
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு – குறு 124/2 ஊர் பாழ்பட்டுப்போனதைப் போன்ற ஓமை மரங்களையும் கொண்ட பெரிய பாலை நிலம் அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய பெரும் பாழ் செய்தும் அமையான் – பட் 269,270 அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் படைவீடுகள் அழகு அழியவும், பெரும் அழிவைச் செய்தும் மனநிறைவடையானாய் வாழ்வோர் போகிய பேர் ஊர் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – நற் 153/9,10 குடிமக்கள் விட்டு ஓடிப்போன பெரிய ஊரில் பாழ்பட்ட இடங்களைக் காவல்புரிந்து நிற்கும் தனி மகனைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்