சொல் பொருள்
(வி) 1. அழிவுறு, கேடுறு, 2. ஒளி மங்கு,
சொல் பொருள் விளக்கம்
1. அழிவுறு, கேடுறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be ruined, become dilapidated
lose lustre
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப – பெரும் 423,424 (தன்னை)எதிர்ப்போரின் ஊர்களிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் கேடுறவும், (தன்னிடம்)நயந்துகொண்டவர் நாடுகள் நல்ல பொன் பூத்துத் திகழவும், ஆள்பவர் கலக்கு_உற அலைபெற்ற நாடு போல் பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ – கலி 5/12,13 நாட்டை ஆள்பவர் அழிவு பல செய்ய, அவரால் அலைக்கழிக்கப்பட்ட நாட்டு மக்கள் போல ஒளியிழந்த முகத்தோடு பரிதவித்து இருப்பாளோ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்