1. சொல் பொருள்
(பெ) ஒரு சங்க கால ஊர்,
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்க கால ஊர்,
இது பண்டைய சோழ நாட்டைச் சேர்ந்தது. இந்த ஊரில் பெருஞ்சாத்தன் என்ற ஒரு வள்ளல் இருந்தார். இவர் வேளாண் குடியைச் சேர்ந்தவர். இவரை மதுரை நக்கீரர் புகழ்ந்து பாடியுள்ளார் (புறம் 395)
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a city in sangam period
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் அற பெயர் சாத்தன் கிணையேம் பெரும – புறம் 395/20,21 நீண்ட கையையுடைய வேண்மானுக்குரிய அரிய காவல் பொருந்திய பிடவூரிலுள்ள அறத்தால் உண்டான புகழையுடைய சாத்தனுக்குக் கிணைப்பறை கொட்டிப்பாடும் கிணைப்பொருநர் ஆவோம் பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும் - தேவா-அப்:2787/2 தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று - தேவா-அப்:2154/1 பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன் தம்மானே தண் தமிழ் நூல் புலவாணர்க்கு ஓர் - தேவா-சுந்:980/2,3
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்