சொல் பொருள்
பிட்டுப்பிட்டு வைத்தல் – ஒன்று விடாமல் சொல்லல்
சொல் பொருள் விளக்கம்
பிள் என்னும் வேரில் இருந்து பிறக்கும் சொல், பிட்டு. ‘பிள்’ என்பது பிளவு, பிரிவு, பிதிர்வு என்னும் பொருளில் வரும் பிட்டு என்னும் பண்டம் கைபட்ட அளவில் பொலபொல என உதிர்தலாம், அப்பிட்டு உதிர்தல் போலச் சொல்லை உதிர்ப்பது – பாக்கி ஒன்றும் இல்லாமல் – சொல்லை உதிர்ப்பது – பிட்டுப் பிட்டு வைத்தல் எனப்படும். “அவனிடம் ஒளிவு மறைவு ஒன்றும் செய்ய முடியாது. அவன்தான் உள்ளதை உள்ளபடி பிட்டுப் பிட்டுவைத்து விடுகிறானே” என்பது பிட்டு வைப்பவன் தேர்ச்சியைத் தெரிவிப்பதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்