சொல் பொருள்
(வி) 1. சேர்த்துக்கட்டு, 2. தன்வயப்படுத்து,
2. (பெ) 1. இறுகிய முறுக்கு, 2. மாட்டு,, 3. கட்டு, 4. முயக்கம், அணைப்பு, 5. சேர்த்துப்பிடித்தல், 6. கட்டுகை, 7. பற்று, 8. நோய்
சொல் பொருள் விளக்கம்
1. சேர்த்துக்கட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tie, fasten with ropes, fetter, link, win-over, keep one spell-bound, tight twisting, fix, attach, let hang, tie, embracing, holding together, fastening, binding, attachment, Disease, malady, sickness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கயிறு பிணி குழிசி ஓலை கொள்-மார் பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/7,8 கயிற்றால் சேர்த்துக்கட்டிய குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு அக்குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும் அவ்வோலையைத் தேரும் மாக்களைப் போல புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும் இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் – மலை 72,73 புலவர்க்கு வழங்கும் அவன் கொடைமழையையும், இகழுவோரைத் தன்வயப்படுத்தும் ஆற்றலும், சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிறு 254,255 மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில் பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல, பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல் கோள் வல் பாண்மகன் – பெரும் 283,284 (வாடூனன்றி)பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய (மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ – மது 376 இறுக்கமான கட்டினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்து நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663 (தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் – குறி 177 இறுக்கக் கட்டிச் சார்த்தப்பட்ட மாலையைப் போன்று, (நாங்கள்)கைகோத்தலை விடாதவர்களாய், விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப – அகம் 91/13 இறுக்கமான கட்டுதலையுடைய முழவினையுடைய குட்டுவன் என்பான் புரத்தலால் நில்லா பொருள்_பிணி சேறி – நற் 126/11 நிலையில்லாத இந்த பொருளீட்டலின் ஆசையினால் செல்லுகின்றாய், நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய் துனி கூர் மனத்தள் – நற் 262/4,5 நடுங்கவைக்கும் காதல்நோய் வருத்த, நல்ல அழகெல்லாம் தொலைந்து, கசந்துபோன மனத்தினளாய்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்