சொல் பொருள்
பிதுக்குதல் – துன்புறுத்திப் பறிப்பது பிதுக்குதல் எனப்படும்.
சொல் பொருள் விளக்கம்
கட்டி ஒன்று ஏற்பட்டால் அதனைப் பழுத்த நிலை பார்த்து பிதுக்கி எடுத்தல் உண்டு. ஆணியும் சீழும் வெளிப்பட்டால் புண் ஆறும். மொச்சைப் பயற்றை ஊறவைத்துத் தோலைப் பிதுக்கி எடுத்து அப்புறப்படுத்தல் உண்டு. அதற்குப் ‘பிதுக்குப் பயறு’ என்பது பெயர். அப்பிதுக்குதல் போலத் துன்புறுத்திப் பறிப்பது பிதுக்குதல் எனப்படும். பிதுக்குதலில் வெறுமையாகப் பிதுக்கி இன்புறுவதும் உண்டு. உள்ளதைப் பறிப்பதற்காகப் பிதுக்கித் துன்பூட்டுவதும் உண்டு. அந்நிலைகளில் பிதுக்குதல் துன்புப் பொருளதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்