1. சொல் பொருள்
(பெ) 1. பார்க்க : பித்திகம், 2. சிறு சண்பகம்,
2. சொல் பொருள் விளக்கம்
1. பார்க்க : பித்திகம்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Cananga-flower tree, Magnolia champaca
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என – நற் 97/6,7 பஞ்சினை உச்சியில் கொண்ட இதழ்களைக் கொண்ட பைங்குருக்கத்தி மலருடன் சிறு சண்பகமலரையும் கலந்த மலரை விலைக்கு வேண்டுமா என்று கூவிக்கொண்டு பேடையுடன் பவள கால் புறவு ஒடுங்க பித்திகையின் தோடு அலர் மென் குழல் மடவார் துணை கலச வெம் முலையுள் - 6.வம்பறா:1 331/2,3 பித்திகை-தொறும் படை பிறங்கி அனல் பெய்யும் - சீறா:4132/2 பித்திகை தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின் - வில்லி:10 55/4 வித்தகர் கொடுத்த பித்திகை பிணையலும் - உஞ்ஞை:42/74 கத்திகை தொடுத்தும் பித்திகை பிணைத்தும் - இலாவாண:14/29 பித்திகை கொழு முகை ஆணி கைக்கொண்டு - புகார்:8/55 பித்திகை பிணையல் சூழ்ந்து பெண் கொடி பொலிந்த அன்றே - சிந்தா:4 971/4 பெருமகன் காதல் பாவை பித்திகை பிணையல் மாலை - சிந்தா:10 2177/1 திணியும் இதழ் பித்திகை கத்திகை சேர்த்துவாரும் - பால:16 45/4 பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகை சேர்ந்துழி சேர்ந்துழி நிறத்தை சேர்தலால் - கிட்:1 2/2,3 ஆசையை உற்றன அண்ட பித்திகை பூசின வெண் மயிர் பொடித்த வெம் பொறி - கிட்:7 19/2,3 ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற - கிட்:10 47/4 பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என - நற் 97/7
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்