சொல் பொருள்
பிய்த்தெடுத்தல் – பறித்தல்
சொல் பொருள் விளக்கம்
வாழைத் தாரில் இருந்து சீப்பையும், சீப்பில் இருந்து பழத்தையும் பிய்த்து எடுப்பது நடைமுறை. பழத்தைப் பிய்ப்பதுபோல உள்ளதைப் பறித்துக் கொள்ளலும் பிய்த்தெடுத்தலாயிற்று. “பிச்சுக் கொடு கொடு எனத் தின்பான்” என்பது பாரதியார் பாவின் ஓரடி. தலையை ப் பிய்த்துக் கொள்ளுதல் என்பதொரு வழக்குத் தொடர். கவலைப்படுதல் என்பது அதன் பொருள். அது தலையைக் கோதும்போது முடி சிக்குப் பட்டுப் பிய்க்கும் துன்பம் வழியாகத் துன்பப் பொருளும், சிக்கல் நீங்காது பறித்துக் கொண்டு வருதலால் பறித்தல் பொருளும் ஒருங்கு பெறுவதாயிற்று. பலமுறை அது வேண்டும் இது வேண்டும் எனக் கேட்டலும் பிய்த்தெடுத்தலே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்