சொல் பொருள்
(பெ) 1. கொடிவகை, கெட்டியான, மெல்லிதான மூங்கில், 2. வெட்டிய பிரம்புத்துண்டால் (cane) செய்யப்பட்ட, தேரின் ஒரு பகுதி, 3. ஒரு மலை
சொல் பொருள் விளக்கம்
1. கொடிவகை, கெட்டியான, மெல்லிதான மூங்கில்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rattan, Calamus rotang, Calamus viminalis, a part of a chariot made of cane, a hill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 287,288 பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன், நீர் அருகிலுள்ள பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும், திண் தேர் பிரம்பின் புரளும் தானை – மது 435 திண்ணிய தேரின் பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும் இந்தப் பிரம்பு அரம் போன்ற முட்களையுடையது. பழன பொய்கை அடைகரை பிரம்பின் அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி – அகம் 96/3,4 மருதநிலத்துப் பொய்கையின் அடைகரையிலுள்ள பிரம்பினது அரத்தின் வாய் போன்ற அழகிய முட்களைக் கொண்ட நீண்ட கொடி புளிப்பான பழத்தையுடையது. தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து – அகம் 196/6 இனிப்புடன் கூடிய புளிப்பினையுடைய பிரம்பின் திரண்ட பழத்தினைப் பெய்து இதன் கொடி ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும். அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி – குறு 91/1 ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கிற கொடியாகிய பிரம்பின், புறத்தில் வரிகொண்ட விளைந்த கனியை, அருவி ஆம்பல்கலித்த முன்துறை நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன மின் நீர் ஓதி – அகம் 356/18-20 அருவிநீர் வீழ்ந்துகொண்டிருக்கும் நீர்த்துறையின் முன் பக்கத்தே ஆம்பல் பூக்கள் தழைத்திருக்கும் நன்னனது அழகிய பிரம்பு மலையைப் போன்று மின்னுகின்ற கருமையான கூந்தலை உடையவளே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்